• Sun. Dec 8th, 2024

இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கும் பிரிட்டன்

Sep 18, 2021

இலங்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி தொடக்கம் சிவப்பு பட்டியலில் இருந்து பிரிட்டன் நீக்கும் என இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் பிரிட்டன் இலங்கையின் பெயரை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி இணைத்தது.

சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கொவிட் பரிசோதனை நடாத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.