
தென்னிலங்கையில் வசித்துவரும் சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவு வட்டுவாகலில் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்துடன் தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டையீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் அவரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.