• Sat. Dec 7th, 2024

இலங்கையில் நெருக்கடி நிலை- உதய கம்மன்பில

Nov 20, 2021

அரசாங்கத்திற்கு ரூபா இல்லாததும், நாட்டுக்கு டொலர் கிடைக்காததும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடி என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் வரம்பிற்கு அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்வதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.