• Tue. Jul 23rd, 2024

இலங்கையில் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அபாயம்

Nov 12, 2021

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள் பெருகும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது 23 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.