• Sun. Apr 27th, 2025

தலதா மாளிகைக்குள் ட்ரோன் – பங்களாதேஷ் பிரஜை கைது

Nov 6, 2021

கண்டி தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகைக்கு கோவிலுக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.