• Wed. Jan 15th, 2025

இலங்கை மீது பொருளாதாரத் தடை; பிரிட்டன்- ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் யோசனை

Jul 30, 2021

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு நடக்கவுள்ளது.

இந்த அமர்வில் இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை அமுல்செய்யும் யோசனை பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த யோசனைக்கு ஆதரவளித்த மெஸிடோனியா, கனடா, ஜேர்மன், மொட்றிகோ ஆகிய நாடுகள் தற்போதும் விருப்பம் வெளியிட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.