நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.