• Tue. Jan 14th, 2025

இளைஞர்களுக்கு இலவச வாகனப் பயிற்சி

Mar 3, 2022

ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு இளைஞருக்கு ரூபா 25,000 செலவில் மூன்று மாத கால வாகன சாரதி பயிற்சியும் அனுமதிப் பத்திரமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.