• Thu. Apr 24th, 2025

இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் ஜேர்மனி

Feb 18, 2022

ஜேர்மனியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அந்நாட்டு அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டனர். ஆனால் மனித உரிமை அமைப்புகளால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.