• Thu. Apr 24th, 2025

இலங்கையில் இன்றுமுதல் மீண்டும் அமுலாகும் மின்தடை

Feb 18, 2022

இலங்கையில் இன்றுமுதல் நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின் தடை குறித்த பிரதேசங்களும் நேர அட்டவணை தொடர்பான விபரங்கள் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.