• Fri. Mar 31st, 2023

ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இருவரை நியமித்த கோடாபய நியமனம்

Mar 16, 2022

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அசோக பத்திரகே மற்றும் மொஹான் பண்டிதகே ஆகியோர் இப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய உறுப்பினர்களுடன், தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.