• Thu. Sep 28th, 2023

இலங்கையில் அதியுச்சம் தொட்ட தங்கவிலை!

Mar 25, 2022

இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று பிற்பகல் வரை 155,000 ரூபாவாக அதிகரித்திருந்தது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 167,000 ரூபாவாக மாறியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இறக்குமதிக்கான டொலர்கள் கிடைக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.