அரசாங்கத்தின் பலவீனத்தை மக்கள் அறியும்படி சமூக வலைத்தளங்கள் பிரசித்தப்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை பிரசித்தப்படுத்தும் செயற்பாட்டில் பலவீனம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தியுள்ள சமூக வலைத்தளங்கள், இன்று அரசாங்கம் பலவீனமடைந்துவிட்டதாக பல விடயங்களை வெளியிட்டு வருவதால் அதனையே மக்கள் இன்று நம்பும்படியாக அமைந்து விட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை எவ்வகையிலும் உள்நாட்டு விடயங்களில் வெளித்தரப்பினர் தலையீடு செய்வதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஓகோபித்த ஒரு கோரிக்கையை தாம் நிறைவேற்றிவிட்டதாகவும், ஆனால் சிலர் முன்வைத்த தனிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தினால்தான் தம்மை அவர்கள் கடுமையாக விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த உரையில் தமிழ் மக்கள் சார்ந்த எந்த விடயங்களும் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.