• Sun. Dec 1st, 2024

அவசர அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கம்

Dec 13, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர், நேற்றிரவு முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதியக் கூட்டத்தொடர், 2022 ஜனவரி 18ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நாளை முக்கிய கூட்டமொன்று நடைபெறவிருக்கின்றது.

அந்தக் கூட்டத்தில், அமைச்சரவை பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இணை அமைச்சரவை பேச்சாளர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகிய மூவரும் கலந்துகொள்ளவுள்ளனார்.

ஆகையால், அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நாளை (14) மு.ப. 10.00 மணிக்கு இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மெய்நிகர் ஊடக சந்திப்பு இடம்பெறாது என்பதை கவனத்திற் கொள்ளவும் என்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அனைத்து ஊடகங்களுக்கும் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அடுத்த வாரம் வழமைபோன்று இடம்பெறும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.