• Sat. Jan 25th, 2025

பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்களில் 17 மாணவர்களுக்கு தொற்று

Jan 20, 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 03 நாள்களுக்குள் 17 மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், இன்று (20) தெரிவித்தார்.

காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, இவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இரு வாரங்களுக்குள் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

பரவலாக தடிமல், காய்ச்சல் உள்ளவர்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

இதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இரு வார காலத்துக்குள் 155 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக தற்போது இனங்கணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதால், பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் முகக்கவசம் அணிவதோடு, இறுக்கமான சுகாதார நடைமுறைகைளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.