சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று(11) வெளியிடப்பட்டது.
இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த அதிவிசேட வர்த்தமானி கீழே: