• Thu. Oct 31st, 2024

கனடாவை தொடர்ந்து இலங்கையின் தூதுவரை ஏற்க மறுக்கும் இத்தாலி

Sep 6, 2021

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கு எந்தவித பதிலையும் வழங்கவில்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 05 மாதங்களாக இத்தாலி குறித்த நியமனத்திற்கு பதிலேதும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டு உள்ளதால் கனேடிய அரசாங்கம் அவரை ஏற்க மறுத்துவிட்டது.

அதனை தொடர்ந்து அவர் கடந்த ஏப்ரலில் இத்தாலிக்கான தூதவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் அவரது நியமனம் குறித்து இத்தாலி அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.