இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சுங் நியமிக்கப்படுவார்.
தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக அலைனா அலெய்னா டெப்லிட்ஸ் செயற்பட்டு வருகின்றார்.
இவர் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.