• Tue. Sep 10th, 2024

சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி குவிந்த 11,000 மாணவர்கள்!

Jun 16, 2021

சீனாவின் வுஹான் நகரில் 18 மாதங்களுக்குப் பிறகு, 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தற்போது உலகமே கொரோனா தொற்று பீதியில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்திவரும் சூழல்நிலையில், சீனாவில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழா மத்திய சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.