• Tue. May 30th, 2023

இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முகக்கவச விலை!

Mar 20, 2022

முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது.

இந்தநிலையில் நாளை முதல் முகக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.