இலங்கையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் நேற்றிரவு நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தில் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தெற்கு கடல் பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.