• Tue. Apr 16th, 2024

318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை ஆரம்பம்

Mar 22, 2022

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு – பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதன் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமையினால், தபால் சேவை நடவடிக்கைகளுக்கும், பூக்கள் உள்ளிட்ட பொதிகள் விநியோக நடவடிக்கைகளுக்கும் தடைப்பட்டிருந்தன . இன்று முதல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்த ரயிலின் முதலாம் வகுப்பு படுக்கை பெட்டியை அகற்றி அதற்கு பதிலாக முதல் தர ஆசனங்களை அமைக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்த போதிலும், தூங்கும் வசதி பெட்டிகளுடன் கூடிய பதுளை கொழும்பு இரவு அஞ்சல் புகையிரதம் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம், தலைமன்னார் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கான இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.