• Thu. Nov 30th, 2023

இலங்கையில் பதிவுத் திருமணத்திற்கு மட்டும் அனுமதி

Aug 16, 2021

தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று முதல் தனிமைப்படுத்தல் உத்தரவை மிகவும் கடுமையாக அமுலாக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, அனைவரும் அதற்கமைய செயற்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.