• Thu. Nov 30th, 2023

உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு!

Jul 26, 2021

முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹிஷாலியின் மரணம் மீது தமக்கு சந்தேகம் காணப்படுவதனால், சடலத்தை மீள தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைகளை நடத்த வேண்டும் என ஹிஷாலியின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சடலம் மீது புதிய சட்ட வைத்திய அதிகாரியொருவர் விசாரணைகளை நடத்தி, அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என விசாரணைகளை நடத்தும் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

குறித்த கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே, நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.