• Thu. Nov 21st, 2024

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல்பார்பிரேஸ்!

Jan 25, 2022

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் போல் பார்பிரேஸ் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டுவருட காலத்திற்கு தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் செயற்படுவார். இந்தியாவிற்கான இலங்கை அணியின் அடுத்த மாத சுற்றுப் பயணத்தின்போது அவரது இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர் பர்பிரேஸ் நியமிக்கப்படவில்லை எனினும் விண்ணப்பித்தவர்களின் பதில்கள் குறித்து திருப்தியடையாத கிரிக்கெட் ஆலோசனை குழு வேறு நபர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தெரிவாக முன்னாள் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் காணப்பட்ட போதிலும் அவருக்கு கொழும்பி;ற்கு உடனடியாக திரும்புவதில் காணப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஆலோசனை குழுவினர் பர்பிரேசினை நாடினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில வாரங்களில் பர்பிரேஸ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார். 2014 பங்களாதேஸில் இடம்பெற்ற உலக கிண்ணப்போட்;டிகளில் விளையாடிய இலங்கை அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போல் பர்பிரேஸ் இலங்கை கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பங்களிப்பு செய்திருந்தார்.

எனினும் அதன் பின்னர் அவர் உடனடியாக தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டிரெவர் பெய்லிசுடன் இணைந்து கொண்டார்.

அவர் வெளியேறிய விதம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவரின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக இரகசியமாக பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டது என்ற தகவலும் உள்ளது.