• Sun. Oct 1st, 2023

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கைவிலங்குடன் சென்ற ரஞ்சன் ராமநாயக்க!

Aug 4, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையிலுள்ளார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறை அதிகாரிகளால் அவர் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குற்றவாளியைபோல ரஞ்சன் ராமநாயக்க அழைத்துசெல்லப்பட்டமை பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.