• Wed. May 7th, 2025

இலங்கையை மிரட்டும் எலிக்காய்ச்சல்

Nov 25, 2021

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப் பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை 706 ஆகும். மேலும் காலி மாவட்டத்தில் 643 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 600 பேரும், கேகாலை மாவட்டத்தில் 418 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை, எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4.

இந்நிலையில் இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.