இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பான விசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ (Judo) சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் (Scrabble) சம்மேளனம், இலங்கை சர்பிங் (Surfing) சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு (Jiu-jitsu) சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளன.
இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.