• Fri. Feb 7th, 2025

இலங்கையில் மணமக்களுக்கு விசேட பயண அனுமதி

Jul 13, 2021

இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் , மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.