• Fri. Jul 26th, 2024

இலங்கையில் ஒக்டோபர் இறுதிவரை கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!

Oct 13, 2021

இலங்கையில் வரும் 16 ஆம் திகதி முதல் நீக்க திட்டமிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், ஒக்டோபர் மாதத்தில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் இரு கட்டங்களாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

அதன்படி, முதல் கட்டத்தின் கீழ் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஒரு வழிகாட்டல் நெறிமுறையையும் அக்டோபர் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை மற்றுமொரு வழிகாட்டலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அக்டோபர் 16 முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுக்கு அமைய, திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் உணவகங்கள், கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முதல் கட்டமாக வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும்போது தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பின்னர் மக்களின் பொறுப்பற்ற நடத்தையை கருத்திற்க் கொண்டு சுகாதார அதிகாரிகள் நிலைமையை சிந்தித்து குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

பொது மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறியுள்ளமையால், அது மற்றுமொரு கொரோனா அலைக்கு வழிவகுக்கும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்களின் நடத்தைக்கு ஏற்ப நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீடிக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அக்டோபர் 21 வரை அல்லது இம்மாத இறுதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.