இலங்கையில் மேலும் 75 ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
78 மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை 75 ஒமிக்ரோன் நோயாளிகளும் 3 டெல்டா கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் மூன்று வாரங்களில் சமூகத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை இது தெரியவந்துள்ளது என வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு அவிசாவல பொரளஸ்கமுவ கட்டுகொட கொஸ்கம மடபத்த காலி மவுன்ட்லவேனியா நுகோகொட பாதுக்க வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.