• Mon. Dec 11th, 2023

இந்திய வைரஸ் இலங்கை முழுவதும் பரவும் அபாயம்

Jun 19, 2021

இந்தியாவில் பேராபத்தை உண்டாக்க கூடிய திரிவு வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அது நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தெமட்டகொட 66 வத்த என்ற பகுதியிலேயே இந்திய வைரசினால் பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் அதிகளவு மக்கள் வாழ்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். தெமட்டகொட 66 வத்தயில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வசிக்கின்றனர்.

அவர்களில் பலர் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் முச்சக்கரவண்டிச் சாரதிகள். இவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் இந்திய வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.