• Fri. May 9th, 2025

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்; தடுப்பூசி போட்டால் மட்டுமே பஸ்ஸில் அனுமதி

Jul 28, 2021

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை ஏற்படபோகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை வெளிநாடுகளில் பலவற்றிலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை கட்டாயமாக்குவதற்காக இந்த நடைமுறையினை செயல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.