• Fri. Dec 27th, 2024

மலையகத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம்

Mar 5, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மலையகத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று காலை மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் போராட்டம், கண்டியிலும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளைய தினம் ஹட்டன் மற்றும் பண்டாரவளை நகரங்களில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.