இலங்கை நாட்டுத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி இன்று ராஜபக்ச வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த நாட்டில் உள்ள இலங்கை சிங்களவர்கள் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இவ்வாறு இத்தாலியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தற்போதை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் உள்நாட்டில் அவசரகால சட்டம் போட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை முடக்க முடிந்தாலும் வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
தடைபோட முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.