• Wed. Jan 15th, 2025

இலங்கை முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கை

Jun 20, 2021

இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த வாரமளவில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

பரிசோதனை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பரிசோதனை கருவிகளுக்கு மாறாக, இம்முறை OXFORD NANO தொழிநுட்பம், முதன் முறையாக பயன்பத்தப்படவுள்ளதாகவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

NANO தொழிநுட்பத்திற்கு தேவையான கருவிகள், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.