• Wed. Nov 29th, 2023

இலங்கை முழுதும் களமிறக்கப்பட்டுள்ள சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு

Jun 13, 2021

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் திரட்டுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழு களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பலரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், எனினும் ஒரு சிலரது நடவடிக்கை வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் அனைத்து மக்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.