இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு ஆணையாளர் நாயகம் மிச்சேல் பச்சலட் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள அறிக்கை குறித்து மார்ச் மாதம் 3ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் அதன் பிரதியொன்று நேற்று வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பதிலளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.