• Mon. Apr 15th, 2024

இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

Nov 18, 2021

இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும் பொதுமக்கள் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.

நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், களஞ்சியசாலைகளிலும் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.