• Fri. Nov 15th, 2024

பாகிஸ்தான் வழங்கிய மாம்பழங்களை மறுத்த இலங்கை அரசாங்கம்

Jun 14, 2021

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்க முன் வந்திருந்தது.

எனினும், கோவிட் பெருந்தொற்று அபாயம் காரணமாக மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன.

சீனா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க  முன்வந்துள்ளது.

எனினும், இந்த அன்பளிப்புக்களை அநேகமான நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அன்பளிப்பினை பெற்றுக் கொள்வதற்கு முடியாமையையிட்டு வருந்துவதாக இலங்கை, கனடா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவித்துள்ளன.

கடந்த காலங்களில் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணும் நோக்கில் காலத்திற்கு காலம் மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.