• Mon. Oct 2nd, 2023

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பிசிஆர் தேவையில்லை

Feb 26, 2022

பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் பிசிஆர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனை தெரிவித்துள்ளார்.