பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் பல்வேறு காரணங்களை காரம் காட்டி பெரும்பலான பொதுமக்கள் பொது வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாடு மேலும் பாதிப்பினை எதிர்நோக்கும்.
எனவே கொவிட் -19 தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.