தலிபான்கள் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் பேச்சாளர் ஸுஹைல் ஷஹீன் (Suhail Shaheen) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தலிபான்கள் சுதந்திரமாக இயங்கும் விடுதலையை குறிகோளாகக் கொண்டுள்ள அமைப்பு என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் படையினரை வெளியேற்றும் செயற்பாட்டில் 20 வருடங்கள் ஈடுபட்டதாகவும் தலிபான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.