• Wed. Nov 29th, 2023

இலங்கையில் வேகமாக பரவிவரும் TINEA பூஞ்சை தொற்று!

Jul 21, 2021

இலங்கையில் கொரோனா தொற்று அபாயத்திற்கும் மத்தியில். ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் TINEA என அடையாளம் காணப்பட்ட நோய் வேகமாக பரவி வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்ளல் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவை தொற்று நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்நோயால் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நோயிலிருந்து மீள சுமார் ஆறு மாதங்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லையெனில் தொற்று மோசமடையக்கூடும் எனவும் நுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் மேலும் தெரிவித்தார்.