• Tue. Apr 16th, 2024

இலங்கையில் நீருக்கும் தட்டுப்பாடு

Mar 30, 2022

மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் தற்போது மணல் மூட்டைகளை இட்டு நிரப்பி நீரை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக நீரை விநியோகிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறான நிலை காணப்படும் எனவும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

அதனை சிறந்த வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு மக்களின் உதவியும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயிர்செய்கைகள், வாகனங்களை சுத்திகரிப்பது மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்காக குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்து விக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், எதிர்ப்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறாமையினால், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.