• Sun. Oct 20th, 2024

இலங்கை முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!

Aug 10, 2021

நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று(10) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார்.

அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.