• Sun. Oct 13th, 2024

ஆஸ்திரேலியாவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Sep 22, 2021

ஆஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், அந்நாட்டு நேரப்படி இன்று(22) காலை 9.15 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் முதலான பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு காரணமாக கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.