• Mon. Dec 4th, 2023

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவு

Jun 19, 2021

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ் (António Guterres) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று (18) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளரான போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரெஸ், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.