ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவினல் மோயிஸ் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டு;ளளார்.
ஜனாதிபதி ஜோவினல் மோயிஸின் (Jovenel Moise) வீட்டில் இன்று காலை ஆயுதபாணிகள் குழுவொன்றினல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என இடைக்கால பிரதமர் கிளோட் ஜோசப் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மோயிஸ் ஆங்கிலம் மற்றும் ஸ்பெய்ன் மொழிபேசும் வெளிநாட்டவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் கிளோட் ஜோசப் கூறியுள்ளார்.
தற்போது தானே ஹெய்ட்டி நாட்டுக்கு பொறுப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.