• Sat. Jul 27th, 2024

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆஸ்திரேலியா

Oct 1, 2021

கொரோனா பரவல் காரணமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

கொரோனா தொற்று தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச பயணங்கள் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றன.

எனினும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமே பெரும்பாலான நாடுகள் அனுமதித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய செல்ல காத்திருக்கும் இந்திய மாணவர்கள், இனி எந்த சிக்கலும் இன்றி செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சீனாவால் தயாரிக்கப்பட்ட ‘சினோவாக்’ தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்திய மாணவர்கள் உடனடியாக ஆஸ்திரேலியா செல்ல முடியுமா என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.